கொழும்பு பிரபல ஹோட்டலில் அழகியுடன் இருந்த 6 பேர் ; பொலிஸார் எடுத்த நடவடிக்கை
கடந்த ஞாயிறன்று கொழும்பு ஷாங்க்ரி-லா ஹோட்டலில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட மேலும் 6 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
முன்னதாக, பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்ததற்காக நிகழ்வு அமைப்பாளர் சந்திமல் ஜெயசிங்க மற்றும் மொடல் பியாமி ஹன்சமாலி ஆகியோரை பொலிசார் கைது செய்த பின்னர் நீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்கியிருந்தது.
சந்திமல் ஜெயசிங்கவின் 38வது பிறந்தநாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணி முதல் முன்பதிவு செய்யப்பட்டது. 10வது மாடியிலுள்ள 1005ஆம் இலக்க அறையில் பிறந்தநாள் நிகழ்வு நடந்தது.
ஹொட்டலிற்கு பொலிசார் வந்ததை அறிந்ததும், நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்ற நிலையில் சந்திமல்- பியூமி ஜோடி மட்டுமே அறையில் இருந்தார்கள். இந்த சம்பவ நேரத்தில் சுமார் 12 பேர் அங்கு இருந்ததுடன் மற்றையவர்கள் வந்து சென்றதுடன் 50 பேர் அந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை அங்கு அறை கட்டணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.