பொலிஸாரின் அதிரடியால் ஒரே நாளில் சிக்கிய 500 க்கும் மேற்பட்டோர் ; 36,000 பேர் பரிசோதனை
நாடளாவிய ரீதியில் நேற்று (07) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 526 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், 36,840 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிடியாணை
அத்துடன், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 316 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 144 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 430 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 124 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 6,009 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.