ஒக்டோபர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள்!
ஒக்டோபர் மாதத்தில் பல முக்கிய கிரக பெயர்ச்சிகள் நிகழ உள்ள நிலையில் கிரகங்களின் தலைவனான சூரியன், இந்த மாதத்தில் நீச்சா வீடான துலாமில் சஞ்சரிக்க உள்ளார்.
அத்துடன் சுக்கிரன், புதன், செவ்வாய் போன்ற கிரகங்களின் பெயர்ச்சியும் நிகழ உள்ளன.அதன் அடிப்படையில் சில ராசிகள் நற்பலன்கள் அடைந்தாலும், சில ராசிகள் சில விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என சொல்லப்படுகின்றது.
ரிஷபம் :
அக்டோபர் மாதத்தின் கடைசி 2 வாரங்கள் ரிஷபத்திற்கு மிகவும் சவாலானதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் குடும்ப வாழ்வில் சில சிக்கல்களைத் தீர்க்க வேண்டியிருக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் பேசும் போது பேச்சில் கவனம் தேவை. ஏனெனில் சிறிய விஷயங்கள் கூட பெரிய வாக்குவாதத்தில் கொண்டு சேர்க்கலாம். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில், பங்குதாரருடன் குழப்பம் ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். செலவுகளைக் கட்டுப்படுத்த சரியான திட்டங்கள் தேவை.
கடகம்:
கடக ராசிக்கு 3ம் வீட்டில் புதன் இருப்பதாலும், புதன் வக்ர கதியில் செல்வதாலும் இந்த மாதம் தைரியம், வீரியம் குறைய வாய்ப்புள்ளது. சமூக மட்டத்தில் சில மோசமான நிலை ஏற்படலாம்.உங்கள் பேச்சை குறைத்துக் கொள்வதும், கட்டுப்படுத்துவதும் அவசியம். கோபத்தில் உங்கள் நெருக்கமானவர்களுடன் உறவு பாதிக்கப்படலாம். இளைய சகோதரர் / சகோதரிகளுடனான நட்பு பாதிக்கப்படலாம்.
விருச்சிகம் :
அக்டோபர் மாதத்தில், உங்களுக்கு உற்சாகமின்மை ஏற்படலாம். அதனால் உங்களுக்கு பிடித்த வேலையை செய்து மனம், உடலை உற்சாகமாக வைத்துக் கொள்ளவும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம். உங்களின் தொழில் பிரச்சினைகளைத் தீர்க்க நம்பகமான, அனுபவமுள்ளவர்களிடம் மட்டும் பேசுங்கள். சூரியன் நீசமாகி இருப்பதால் உங்கள் நம்பிக்கை பலவீனப்படும். மனதைக் கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம். தினமும் குளித்து சூரிய பகவானை வழிபடுவது அவசியம்.
மீனம்:
இந்த மாத்தில் உங்கள் மனதில் அதிருப்தி, விரக்தி உணர்வுகள் மேலோங்கும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், வாழ்க்கையில் வெற்றி கிடைக்கவில்லை என்று புலம்ப நேரிடும். கவலை வேண்டாம். பொறுமையுடன் இருந்தால் உங்கள் கடின உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
சூரியனின் அமைப்பு காரணமாக உங்கள் உடல் பலவீனமாக உணருவீர்கள். சிறு உடல் நல பிரச்னைகள் வந்து செல்லும். மன அமைதி பெற யோகா, தியானம் செய்யவும்.