இந்த 5 ராசிக்காரர்களுக்கும் வெளிநாடு செல்லும் அதிஷ்டம் இருக்குதாம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் பிறந்த ராசி அவர்களின் ஆளுமையையும், எதிர்காலத்தை நிர்ணயிப்பதிலும் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
இன்றைய உலகில் அனைவருமே படிப்பு, வேலை, குடியேற்றம், பயணம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக வெளிநாடு செல்வதை விரும்புகிறார்கள்.
வெளிநாடு செல்வதற்கான காரணங்கள் தனிப்பட்ட அல்லது தொழில்ரீதியாக இருக்கலாம்.
ஆனால் கிரக அமைப்பு மற்றும் பிறப்பு கிரக நிலைகள் காரணமாக இது விரும்பியபடி நடக்காமல் போகலாம்.
ஒவ்வொரு ராசியிலும் கிரகங்கள் சாதகமாக இருக்கும் போது வாழ்க்கையில் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
சில ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் சில ராசிக்காரர்களுக்கு எப்போதும் கிடைக்காது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தைரியமாகவும், புத்திசாலி தனமாகவும் இருப்பார்கள்.
கல்வி மற்றும் வேலை நோக்கங்களுக்காக அவர்கள் வாழ்க்கையில் சில நாடுகளுக்குச் செல்ல அவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
அவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால் வெளிநாட்டு வேலைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மற்றும் துரிதமாக முடிவெடுக்கக் கூடியவர்கள்.
அவர்களைப் பொறுத்தவரை கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் மிக அதிகம்.
இளம் வயதிலேயே அவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கிரக நிலைகள் கூடி வந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதற்கான வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் இணக்கமாக இருக்கக்கூடியவர்கள்.
அவர்கள் தங்கள் வேலையின் மூலம் வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.
பதவி உயர்வு மூலமாகவோ அல்லது வேலை நிமித்தமாகவோ அவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் அவர்கள் வெளிநாட்டில் செட்டிலாவதற்கான வாய்ப்புகள் இல்லை.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இயற்கையாகவே படைப்பாற்றல் மிக்கவர்கள்.
அவர்கள் ஒரு இடத்தின் மொழிகள், வரலாறு, ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கு எளிதில் ஈர்க்கப்படுவார்கள்.
அதனால் அவர்கள் வாழ்க்கையில் சில நாடுகளையாவது சுற்றிப்பார்க்க வேண்டுமென்று விரும்புவார்கள்.
அவர்களின் ஆசைகளின் படி அவர்கள் சில வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள்.
ஆனால் வெளிநாட்டில் ஒருபோதும் செட்டிலாக மாட்டார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இயற்கையாகவே சாகசத்தை விரும்புவார்கள்.
தங்கள் சாகசத்தின் ஒரு பகுதியாக பயணம் செய்ய விரும்புகிறார்கள் மற்றும் அவர்கள் சிறந்த கலாச்சாரம் மற்றும் சுதந்திரமான சூழ்நிலையுடன் ஒரு இடத்திற்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள்.
எனவே பணத்தை சேமித்து அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணம் செல்வதை அவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள்.