தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்து சம்பவம் நேற்று இரவு (30) சனிக்கிழமை தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையின் கெலனிகம 12.3 ஆம் கட்டைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 5 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து குறித்து தெரியவருவது, பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் 1969 அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்று உட்பட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களுள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் காஸ்ட்பிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடரில் பொலிஸார் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.