நீரிழிவு நோயால் அவதிப்படுகிறீர்களா? குணப்படுத்த இந்த 5 பழங்களை சாப்பிடுங்க
நீரிழிவு நோய் பாதிப்பு என்பது கிட்டத்தட்ட அனைவரின் வீடுகளிலும் கேட்கும் வார்த்தையாக இருக்கிறது. நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கமாகும். இந்த சிக்கலைக் கண்டறிந்த பிறகு, நீரிழிவு நோயாளி தனது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அத்தோடு உணவில் இனிப்புகளையும், இனிப்பு சுவை கொண்ட பொருட்களையும் உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பழங்களில் இயற்கையான இனிப்பு உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிப்பதால் பலரும் பழங்களை உண்பதை தவிர்க்கின்றனர்.
பப்பாளி இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். பப்பாளியில் "ஃபிளாவனாய்டுகள்" நிறைந்துள்ளன, இது இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது மற்றும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்று கொய்யா. குறைந்த கலோரிகளைக் கொண்ட கொய்யா நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். இதை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு மிகக் குறைவான அளவிலேயே அதிகரிக்கும். ஜீரணிக்க எளிதான இந்தப் பழம், பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
ஆப்பிள் இன்சுலின் சுரப்பிற்கான சிறந்த பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் ஆப்பிள் தோல்களில் "பாலிபினால்கள்" நிறைந்துள்ளன இது கணையம் இன்சுலினை வெளியிட உதவுகிறது மற்றும் செல்கள் சர்க்கரையை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.
பீச் பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் பழம் ஆகும். பீச் பழத்தின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. இந்த பழத்தில் உள்ள உயிர்வேதியியல் கூறுகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இப்பழத்தில் கொழுப்பின் அளவும் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பழம்.
ஆற்றலை அதிகரிக்கக்கூடிய ஆகச் சிறந்த பழங்களில் ஒன்றான பீச்சில், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், இரும்பு, ஃப்ளோரைடு போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளன. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.
இன்சுலின் உணர்திறன் சிகிச்சையில் உதவும் நாகப் பழம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த கருப்பு பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மாவுச்சத்தை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இந்த பழத்தை எந்த நேரத்திலும் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.