பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட 5 பேர் கைதாகலாம்!
பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த கைது செய்யப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
“க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம்
வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணத்தை மோசடி செய்த அரசியல்வாதி, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர், சுற்றுலா சபையின் முறைகேடுகளில் ஈடுபட்ட தலைவர்கள் என பலர் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மிக் விமான ஒப்பந்தத்தில் மோசடிகளில் ஈடுபட்ட பிரதிவாதிகள் குழு மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஒப்பந்தத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை பிறந்துள்ள புதிய வருடத்தில், ஜனாதிபதி அனுரவின் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.