பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 பேர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள், மேற்கொண்ட திடீர் கண்காணிப்பு நடவடிக்கையின் போது ஜெல் வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5.65 கிலோகிராம் கடத்தல் தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல் முயற்சி தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடத்தப்பட்ட தங்கத்துடன் சென்னை செல்லும் விமானத்தில் ஏறிய ஐந்து பயணிகளையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பயணிகள் கொழும்பு பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
15 பொதிகளில் இருந்த தங்கத்தின் கையிருப்பு தோராயமாக ரூ. 107 மில்லியன் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.