தகவல் வழங்குவோருக்கு 5 இலட்சம் ரூபா பணவெகுமதி!
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் இல்லத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குபவருக்கு, 5 இலட்சம் ரூபா வெகுமதியை வழங்க கொழும்பின் சுயாதீன ஊடகம் ஒன்று தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக வழங்கப்படும் சரியான தகவல்களுக்கு 500,000 ரூபா பண வெகுமதி வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் சம்பவம் குறித்த வேறு தகவல்களோ தெரிந்திருப்பின் அவற்றை 077 03 22 821 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அதேவேளை தகவல்களை வழங்கும் நபர்களின் தனிப்பட்ட விபரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்படுகிறது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம குறித்த ஊடக நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.