கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் 5 வகை உணவுகள்
தற்போதைய காலகட்டத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாதவர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர்.
இவ் அதிக கொலஸ்ட்ரால் தீவிர கவலைக்குரிய விஷயமாக மாறி வருகின்றது.
இதற்கு தவறான உணவுப் பழக்கம் மிகப் பெரிய காரணமாக அமைந்து வருகின்றது.
அதிக கொலஸ்ட்ராலைத் தடுக்க நல்ல உணவுப் பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியமான தொன்றாக கருதப்படுகிறது.
இதுபோன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் சில உணவுகளை உகொள்வதால் பயனுள்ளதாக இருக்கும்.
கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்
பருப்பு மற்றும் பிரவுன் ரைஸ்
பருப்பு மற்றும் பிரவுன் அரிசி அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பருப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளதோடு இது எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
அதே சமயம் இதயம் தொடர்பான நோய்களைக் குறைப்பதில் பழுப்பு அரிசி பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தானியங்கள்
முழு தானியங்களும் அதிக கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ், பார்லி மற்றும் தினை ஆகியவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதோடு கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
இந்த முழு தானியங்களை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம்.
பாதாம் மற்றும் தயிர்
அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துவதில் பாதாம் மற்றும் தயிர் கலவை பயனுள்ளதாக கருதப்படுகிறது.
பாதாம் நல்ல இதய ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் எல்டிஎல் கொழுப்பைக் குறைப்பதற்கும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
பாதாமை தயிருடன் சேர்த்து சாப்பிடும் போது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் திறன் 4 சதவீதம் அதிகரிக்கிறது.
மேலும் இந்த கலவை செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றின் கலவையானது இதயம் மற்றும் கொலஸ்ட்ரால் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
இதற்கு மஞ்சள் தூள் மற்றும் கருப்பு மிளகு தூள் ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது.
பச்சையாக இருகுகம் மஞ்சளைக் கருப்பட்டியுடன் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
கொழுப்பு மீன்
சால்மன், கானாங்கெளுத்தி, கருப்பு காட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் அதிக கொழுப்பைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
புரதம் நிறைந்த இந்த மீன்கள் நிறைவுற்ற கொழுப்பு, ஒமேகா கொழுப்பு அமிலங்கள் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன.
மேலும் அவை மாரடைப்பு முதல் பக்கவாதம் வரை கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.