52 வயதுடைய பெண்ணை சீண்டி கொலை செய்த நபர்
பெண் ஒருவரை வண்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த 47 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மிஹிந்தலை, தொரமடலாவ என்னும் பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த இச் சந்தேக நபர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை வண்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியே சென்ற தாய் வீடு திரும்பிய போது அப் பெண் சுயநினைவு இன்றி படுக்கையில் இருப்பதோடு குறித்த நபர் வீட்டில் இருப்பதையும் கண்டுள்ளார்.
மேலும் அப் பெண்ணின் சடலத்தை பிரதேச பரிசோதனைக்கு அனுப்பியதோடு அச் சந்தேக நபரையும் கைது செய்து நீதி மன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.