ஜூன் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி ஒரு புதிய மாதத்தில் நுழையும் போது ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இதனால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில 2023 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் சில முக்கிய கிரகங்கள் ராசி மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளன.
இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்த துரதிர்ஷ்டமானதாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒருவருக்கு நடக்கவிருக்கும் நல்லதை விட தீயதை முன்பே தெரிந்து கொண்டால் அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
இப்போது ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
இவ் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் சற்று மோசமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்று கூறப்படுகிறது.
தொழில்
குறிப்பாக தொழில் தொடர்பான எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என கூறப்படுகிறது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதோடு எவ்வளவு கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
நிதி நிலை
நிதி நிலை சற்று மோசமகா இருக்கும். வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமடைவதால் கவலை அதிகரிக்கும்.
கன்னி
இவ் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று பிரச்சனைகளைத் தரக்கூடிய மாதமாக இருக்கும்.
பண பிரச்சனை
இம்மாதத்தில் திடீரென்று செலவுகள் அதிகரிப்பதோடு பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அது மட்டும் அன்றி கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.
தொழில் ரீதியாக சற்று நன்றாக இருக்கும்.
திருமண வாழ்க்கை
ஆனால் திருமண வாழ்க்கையில் குழப்பங்கள் அதிகரிக்கும். தவறான புரிதலால் தம்பதிகளுக்கு இடையே விரிசல் ஏற்படலாம். எனவே இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இம் மாதம் சிரமங்கள் நிறைந்த மாதமாக இருக்கும்.
வியாபாரம்
கூட்டு வணிகம் செய்பவர்கள், கூட்டாளருடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
நிதி பிரச்சனை
இந்த மாதத்தில் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய பிரச்சனையால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். இந்த மாதத்தில் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையைப் பராமரிப்பது சிரமமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இம் மாதம் சவால்கள் நிறைந்த மாதமாக இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்மறையான பலன்களையே பெறக்கூடும்.
பணி பிரச்சனை
பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் சற்று சிரமமாக இருக்கும். பணியிடத்தில் உங்களிடம் கொடுத்த பொறுப்புக்கள் திரும்ப பெற வாய்ப்புள்ளது.
வியாபாரம்
வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப் பிரச்சனையால் பல வேலைகள் தடைபடும்.
நிதி நிலை
குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் அதிகரிக்கலாம். ஆனால் நிதி நிலை சற்று நன்றாக இருக்கும்.
மருத்துவம்
ஆரோக்கிய பிரச்சனையால் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.