நான்கு மாணவர்கள் மது அருந்தியதாக சந்தேகம் ; ஒருவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றம்
பதுளை, ஹல்துமுல்ல பகுதியில் மது அருந்தியதாகக் கூறப்படும் மாணவர் ஒருவர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவருடன் மேலும் மூவரும் மது அருந்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக ஹல்துமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

16 வயதுடைய நான்கு மாணவர்களும் மது அருந்தியிருந்ததாகக் கூறப்பட்டாலும் மருத்துவ பரிசோதனை இதுவரை பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும், அவர்களில் ஒரு மாணவரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மேலதிக சிகிச்சைக்காக தியதலாவ ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஏனைய மூவரும் ஹல்துமுல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.