பிரான்சில் 2 ஆண்டுகளில் 4 பிரதமர்கள் பதவி விலகல்!
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்ஸ் பிரதமர் பிராங்கோயிஸ் பெய்ரூ தோல்வியடைந்த நிலையில் , பிரான்ஸில் இரு ஆண்டுகளில் நான்கு பிரதமர்கள் பதவி விலகியுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் பேய்ரூ பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
மக்ரோனின் பதவிக் காலத்தில் 4 பிரதமர்கள் பதவி விலகல்
பிரதமர் பிரான்சுவா பேய்ரூவின் வெளியேற்றத்தை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒப்புக்கொண்டதாக எலிசி அரண்மனை தெரிவித்துள்ளது.
பிரதமர் பிரான்சுவா பேய்ரூவின் கடன் குறைப்பு திட்டத்தை நாடாளுமன்றம் நிராகரித்ததை அடுத்து, பிரான்ஸ் அரசாங்கம் சரிந்துள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பேரிடி; மலசல கூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி .... ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினர் பகீர் தகவல்
பேய்ரூவை பதவி நீக்கம் செய்ய சட்டமியற்றுபவர்கள் பெருமளவில் வாக்களித்தனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் பதவிக் காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 பிரதமர்கள் பதவி விலகியுள்ளனர்.
அதேவேளை வரும் நாட்களில் பிரான்ஸ் ஜனாதிபதி ஐந்தாவது புதிய பிரதமரை நிமிக்க வேண்டிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.