வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்; தாமதமாகும் பரிசோதனை முடிவுகள்!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Sundaresan Mar 18, 2023 05:34 PM GMT
Report

வவுனியா - குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகளின் மரணம் தொடர்பான பகுப்பாய்வு பரிசோதனை முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் வவுனியா பொலிஸார் இன்று (18.03.2023) தெரிவித்துள்ளனர்.

வவுனியா - குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த 7 ஆம் திகதி காலை தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 42 வயதுடைய நபர், அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்; தாமதமாகும் பரிசோதனை முடிவுகள்! | 4 Members Family Die Mysteriously In Vavuniya

வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை கடந்த 08 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் வெளியாகவில்லை.

ஆனால் அவர்கள் நஞ்சு அருந்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுப்பாய்வு பரிசோதனை முடிவுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும், அது கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும், குறித்த மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US