4 மணி நேரம் அமைச்சர் பந்துல சொன்னது என்ன?
நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குனவர்தன, ச.தொ.ச. மோசடிகள், வெள்ளைப் பூண்டு விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கூறிய அனைத்து விடயங்களும் சி.ஐ.டி. கைகளில் கிடைத்துள்ளது.
வாக்கு மூலம் வழங்க சி.ஐ.டி. சென்ற, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula GUnawardane) அவற்றைக் கையளித்துள்ளார்.
இந் நிலையில், அந்த ஊடக அறிக்கைகளில் துஷான் குணவர்தன (Dushan Gunawardene) முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒவ்வொன்றாக பந்துல குனவர்தன சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு தன் பக்க விளங்களை அளித்துள்ளார்.
ச.தொ.ச. வெள்ளைப் பூண்டு மோசடி விவகாரம் தொடர்பில் பேலியகொடை விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரே விசாரணை செய்து வருகின்றனர். அவர்கள் ச.தொ.ச. பிரதி பொது முகாமையாளர் ( நிதி) , வர்த்தகர் ஒருவரை இவ்விவகாரத்தில் கைது செய்துள்ளனர்.
அதில் தற்போது பிரதி பொது முகாமையாளர் ( நிதி) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறன பின்னணியில் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர்துஷான் குனவர்தன பதவி விலகியதுடன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பந்துல குணவர்தன பொலிஸ் மா அதிபரிடம் விசாரணைக் கோரி முறையிட்டார்.
இரு அமைச்சர்கள் தனக்கு கடமையை செய்வதை தடுத்து அழுத்தம் பிரயோகிப்பதாக துஷான் குணவர்தன ஊடகங்களிடம் கூறியிருந்தார். இந் நிலையிலேயே தான் முன்வைத்துள்ள முறைப்பாடுகளுக்கு முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பிரதமரிடம் கடந்த 24 ஆம் திகதி கோரிக்கை விடுத்தார்.
இதற்கமைய இந்த முறைப்பாடு தொடர்பில் விரைவான விசாரணையினை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அக்கணமே பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக அழைத்து அறிவுறுத்தினார்.
இதனையடுத்து உடனடியாக அன்றைய தினம் மாலையே பந்துல குனவர்தன சி.ஐ.டி.க்கு சென்று வாக்கு மூலம் வழங்கினார். இதன்போதே துஷான் குணவர்தன முன் வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பிலும் நான்கு மணி நேரமாக பந்துல குண்வர்தன சி.ஐ.டி.க்கு தன் பக்க விளக்கங்களை அளித்துள்ளார்.
இதன்போது துஷான் குணவர்தனவுக்கு எந்த வகையிலும் தான் அழுத்தம் கொடுக்கவில்லை என பந்துள குணவர்தன சி.ஐ.டி.யில் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.