புத்தளம் மீனவர்களை வாய்பிளக்கவைத்த 38 அடி நீளமான பாரிய சுறா!(Photos)
புத்தளம் - நுரைச்சோலை நாவற்காடு கடற்கரையோரத்தில் பாரிய புள்ளி சுறாவொன்று இன்று (30) மாலை கரையொதுங்கியுள்ளது.
மீனவர்கள் இன்று கரை வலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கரை வலையை இழுத்த போதே புள்ளி சுறா வலைக்குள் இருப்பதனை அவதானித்துள்ளனர்.

சுமார் 38 அடி நீளமான சுறா மீன் ஒன்றே இவ்வாறு கரைவலையில் சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, வலைகளை அப்புறப்படுத்தி சுறாவை மீண்டும் கடலில் விடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் பலமணிநேர முயற்சி பலந்தராத நிலையில் கடற்படையினருக்கும், பொலிஸாருக்கும், வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து கடற்படையினரின் இயந்திரப் படகின் உதவியுடன் மீனவர்களினதும் அப்பகுதி பொது மக்களினதும் பல மணி நேரப் போராடத்திற்கு பின்னர் புள்ளி சுறா க்கடலில் விடப்பட்டது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        