பூட்டப்பட்ட வீட்டில் ஏழு நாட்களாக உணவின்றி வாடிய 37 விலங்குகள்; பொலிஸாரின் மனிதாபிமானம்
மத்தேகொட வீட்டுத்திட்டத்துக்கு அருகிலுள்ள பூட்டப்பட்ட வீட்டில் ஏழு நாட்களாக உணவின்றி வாடிய 17 நாய்கள், 20 பூனைகள் மற்றும் ஆமை என்பவை பொலிஸாரால் மீட்கப்பட்டு உணவு, பானம் என்பன வழங்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 330 அடி தூரத்தில் ஒரு சிறிய வீட்டிலிருந்த இரு பெண்களும் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர் மனோஜா வீரக்கொடி குறித்த வீட்டாரின் உறவினர்களிடம் அவ்வீட்டிலிருக்கும் விலங்குகளுக்கு உணவளிக்க கேட்டுக்கொண்டதாகவும் எனினும் அவர்கள் அனுமதிக்காததால் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் தெரியவருகிறது.
இதையடுத்து பொலிஸார் அந்த விலங்குகளை மீட்டு உணவளித்துள்ளனர்.