பொலிஸாரின் அதிரடியால் சிக்கிய 35 வயது பெண் ; அம்பலமான பின்னணி
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்த பெண் சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் வலய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கமைய நேற்று (25) அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் மகா பாலடிகுளம் பகுதியில் அதிரடிச் சோதனை ஒன்றினை மேற்கொண்ட போதே சந்தேகநபர் கைதானார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 121 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின், 127 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு மின்னணு தராசு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் அநுராதபுரம் மகா பாலடிகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடயவர் என்பது ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வலய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தே நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.