34 ஆண்டுக்கு முன் நடத்த கொலை: 84 வயது சிங்கள வயோதிப பெண் சிக்கிய கதை!

Sri Lanka Police Matara Attempted Murder Sri Lanka Police Investigation
By Shankar May 23, 2023 12:01 AM GMT
Shankar

Shankar

Report

 34 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலைச் சம்பவம் பற்றி பொலிஸ் அவசர சேவைப்பிரிவு இலக்கத்திற்கு 119 தொலைபேசி அழைப்பை எடுத்து ஒருவர் வழங்கிய தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவம் மாத்தறை மாவட்டம், ஊருபொக்க பொலிஸ் பிரிவில் அண்ணாசிவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

34 ஆண்டுக்கு முன் நடத்த கொலை: 84 வயது சிங்கள வயோதிப பெண் சிக்கிய கதை! | 34 Years Ago Matara Murder Case Wife Arrested

மேலும் இந்த கொலை சம்பவத்தில் கபுகே ஜினதாச என்பவர், அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகியோரால் கொல்லப்பட்டு அவர்கள் வாழ்ந்த தோட்டத்திலேயே புதைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

34 வருடங்களுக்கு முந்தைய கொலைச்சம்பவம் பற்றியே, பொலிஸ் அவசரசேவைப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அவசரசேவைக்கு வழங்கப்படும் எல்லா தகவல்களும் உண்மையாகவும், சரியாகவும் இருப்பதில்லை. இந்த தகவலின் உண்மைத்தன்மையை முதலில் பொலிசார் உறுதி செய்ய வேண்டும்.

34 ஆண்டுக்கு முன் நடத்த கொலை: 84 வயது சிங்கள வயோதிப பெண் சிக்கிய கதை! | 34 Years Ago Matara Murder Case Wife Arrested

அந்த தகவல், ஊருபொக்க பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. பிரதான பொலிஸ் பரிசோதகர் சமரவிக்ரம அப்போது ஊருபொக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்தார்.

34 வருடங்களுக்கு முந்தைய கொலை பற்றிய தகவலை உறுதி செய்யும் பொறுப்பு, உப பொலிஸ் பரிசோதகர் ஜே.பத்திரத்னவிடம் வழங்கப்பட்டது. அவர், குற்றப் பிரிவினருடன், தோலமுல்ல அன்னாசிவத்தைக்கு சென்றார். சிறு முயற்சியின் பின்னர், 34 வருடங்களுக்கு முன்னர், ஜினதாசா வாழ்ந்த வீட்டைக் கண்டுபிடித்தார்.

34 ஆண்டுக்கு முன் நடத்த கொலை: 84 வயது சிங்கள வயோதிப பெண் சிக்கிய கதை! | 34 Years Ago Matara Murder Case Wife Arrested

அந்த வளவுக்குள் இடிந்த பழைய வீடொன்றும், அருகில் புதிதாக கட்டப்பட்ட புதிய வீடொன்றும் காணப்பட்டன. ஜினதாசவின் மூத்த மகன் சுனில், மனைவி பிள்ளைகளுடன் புதிய வீட்டில் வசித்து வந்தார்.

தந்தை காணாமல் போனபோது சுனிலுக்கு வயது 16. இப்போது அவருக்கு 50 வயதாகிறது. ஜினதாசவின் மனைவி ரோசலின் தனது இளைய மகனுடன், கட்டுவனப் பகுதியில் வசித்து வந்தார்.

ரோசலினுக்கு தற்போது 83 வயது. அவர் பக்கவாதத்தினால் நடக்க முடியாத நிலையில் வாழ்கிறார். இதனால், பொலிசாரால் ரோசலினை சந்தித்து அவரது கணவரைப் பற்றி கேட்க முடியவில்லை. அப்போது சுனிலாலும் தன் தந்தைக்கு நடந்ததைச் சொல்ல முடியவில்லை. 34 வருடங்களாக தனது தந்தையை காணவில்லை என்பது மட்டுமே தனக்கு தெரியும் என சுனில் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

34 ஆண்டுக்கு முன் நடத்த கொலை: 84 வயது சிங்கள வயோதிப பெண் சிக்கிய கதை! | 34 Years Ago Matara Murder Case Wife Arrested

1989 ஆம் ஆண்டு இவருடைய தந்தை காணாமல் போனபோது அவர் தெனிப்பிட்டிக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று கொண்டிருந்தார். தந்தை காணாமல் போனது பற்றி பொலிசில் முறையிட தாயார் அக்கறை காட்டவில்லை, ஜேவிபி புரட்சிக்காலத்தில் அவர் காணாமல் போய் விட்டார் என்றுதான் கூறினார் என மகன் குறிப்பிட்டார்.

பத்திரனவை பற்றி மேலும் விசாரிப்பதெனில் மனைவி ரோசலினிடமே கேட்க வேண்டும். அவர் பக்கவாதத்தினால் நடக்க முடியாமல் உள்ளார். அவரிடம் விசாரிக்க முடியாது. என்ன செய்வதென பொலிசார் திண்டாடினர்.

என்றாலும், 34 வருடங்களின் முன்னர் நடந்த கொலைச்செய்தி சுவாரஸ்யமாக இருந்ததால் பொலிசார் ஆர்வம் காட்டினர். இதனால், 119 அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்பேற்படுத்தியவரிடம் இருந்து மேலதிக தகவல்களை கோருவது பொருத்தமானது என கருதினர்.

34 ஆண்டுக்கு முன் நடத்த கொலை: 84 வயது சிங்கள வயோதிப பெண் சிக்கிய கதை! | 34 Years Ago Matara Murder Case Wife Arrested

பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கு தகவல் அளித்தவர் யாரென அடையாளம் கண்ட பொலிசார் மேலும் ஆச்சரியப்பட்டனர். காரணம், அந்த தகவலை வழங்கியவர், காணாமல் போனதாக கூறப்பட்ட ஜினதாசவின் மகன் சுனில்தான்.

பொலிசார் மீண்டும் சுனிலை தொடர்பு கொண்டனர்.

“எனது தந்தை கொல்லப்பட்டாரா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவனுடைய அம்மா இப்படி ஒரு கதையை அத்தையிடம் சொன்னார்.’’ என சுனில் பேச ஆரம்பித்தார்.

34 ஆண்டுக்கு முன் நடத்த கொலை: 84 வயது சிங்கள வயோதிப பெண் சிக்கிய கதை! | 34 Years Ago Matara Murder Case Wife Arrested

சுனிலின் தாயார் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். சுனில் சிறு வயது முதலே தாயாருடன் நெருக்கமாக இல்லை. தந்தை காணாமல் போனதற்கு தாயே காரணமென நம்பியதால் அவர் தாயுடன் நெருக்கமாக பழகவில்லை. அவரது சகோதரனுடனேயே தாயார் தங்கியிருந்தார்.

அம்மாவின் சகோதரிதான் ஒருமுறை இந்த கதையை தன்னிடம் தெரிவித்ததாக சுனில் குறிப்பிட்டார். தந்தையின் சகோதரிக்கு அம்மாவே அந்த தகவலை கூறினாராம். கட்டுவனவிலுள்ள வீட்டிற்கு ரோசலினை பார்ப்பதற்காக, ஜினதாசவின் சகோதரி சென்ற போது, ரோசலின் இந்த கொலை தகவலை வழங்கியுள்ளார்.

“ஜினதாச கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார். அதனால்தான் இன்று எனக்கு இந்த நிலைமை வந்துள்ளது“ என தனது பக்கவாத நிலமையை குறிப்பிட்டுள்ளார். கணவனை கொன்றது ரோசலினின் மனதை துன்புறுத்தியபடி இருந்துள்ளது.

இந்த தகவலை இரகசியமாக வைத்திருக்க வேண்டுமென ஜினதாசவின் சகோதரி நினைக்கவில்லை. அவர், சுனிலின் மனைவியை தொலைபேசியில் அழைத்து பேசிய போது, குறிப்பிட்டுள்ளார். மனைவி, சுனிலிடம் தெரிவித்தார்.

தனது தந்தையின் மரணத்தில் நீண்டகாலமாகவே சந்தேகமடைதிருந்த சுனில், இதனை 119 அவசர சேவை இலக்கத்தின் மூலம் பொலிசாருக்கு வழங்க முடிவு செய்தார்.

அப்போது சுனில் தெனிப்பிட்டிக்கு அருகில் உள்ள விகாரையில் தங்கியிருந்து, பெளத்த அநெறி பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தார்.

சுனிலை விகாரையில் தங்கியிருந்து நல்ல கல்வியை பெற வேண்டுமென்பதில் தந்தை ஜினதாச சிரத்தை எடுத்துக் கொண்டார். அதனால், சுனிலின் 12 வயதிலேயே - 1985ஆம் ஆண்டு, விகாரையில் உள்ள அறநெறி பாடசாலையில் இணைத்தார்.

சுனில் குடும்பத்தில் மூத்தவர். அவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர். ஒரு சகோதரர் 19 வயதில் விசம் அருந்தி இறந்துவிடுகிறார். தற்போது, கட்டுவனவில் உள்ளவர் மற்றொரு இளைய சகோதரர். சுனிலின் தந்தை ஜினதாச மாத்தறை கம்புருபிட்டியவில் உள்ள கல் பட்டறை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இடையில் அருகில் உள்ள திருவானை தோட்டம் என்று அழைக்கப்படும் தேயிலை தோட்டத்திலும் வேலை செய்தார். அந்தக் குடும்பத்தின் மற்ற இரண்டு பிள்ளைகளை விடவும் ஜினதாச, சுனிலிடம் அதிகம் பாசம் காட்டியுள்ளார்.

அதனாலேயே சுனில் தன் தாயை விட அப்பாவை நேசித்தார். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், சுனிலை பார்ப்பதற்காக மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தெனிப்பிட்டிய விகாரைக்கு வருவதை ஜினதாச வழக்கமாக வைத்திருந்தார்.

அப்படியொரு முறை வந்த போதே, தந்தையை கடைசியாக பார்த்தார். மறக்கவில்லை. சுனில் தனது துக்கங்களையும் மகிழ்ச்சியையும் காண கோவிலுக்கு வந்தபோது தந்தையை கடைசியாக பார்த்தார்.

சுனிலுக்கு அந்த நாள் சரியாக நினைவில்லை என்றாலும், அது 89 ஆம் ஆண்டு என்பது நன்றாக நினைவிருக்கிறது. ஏனென்றால் அது பயங்கரமான காலகட்டம். ஜினதாச காணாமல் போனதும், தாயார் விகாரைக்கு சுனிலை பார்க்க வந்தார்.

சுனில் அப்பாவை பற்றி அம்மாவிடம் கேட்டதற்கு, அவர் சரியான பதில் சொல்லவில்லை. “அந்த ஆள் எங்கே போனாரோ?. பிள்ளையைப் பார்க்கக் கூட வர நேரமாமில்லாமல் இருக்கிறார்“ போன்ற பதில்களும் தாயிடமிருந்து வந்தன.

அதன் பின்னர், நான்கைந்து மாதங்கள் சுனிலை பார்க்க தாயாரும் வரவில்லை. தந்தை எந்த வேலையிலிருந்தாலும் தன்னை பார்க்க வருவார் என சுனில் நம்பினார். ஆனால் தந்தை வரவில்லை. இதனால் அழுத்தத்துக்கு உள்ளாகிய சுனில், பிக்குவிடம் கூறிவிட்டு, வீட்டுக்கு கிளம்பி விட்டார்.

எதிர்பாராத விதமாக சுனில் வீட்டிற்கு வந்தது, தாயாருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. தாயின் வார்த்தைகளில் இருந்து உணர்ந்தார் சுனில். வீட்டில் தந்தை இருப்பதற்கான அறிகுறியையும் அவர் காணவில்லை. தந்தைக்கு பதிலாக, சோமதாச என்ற இளைஞன் அடிக்கடி வீட்டில் தங்கினான். தாயும், சோமதாசவும் நெருக்கமாக இருந்ததையும் சுனில் கவனித்தார்.

அப்போது, சுனிலின் தாயார் ரோசலினுக்கு 49 வயது. சோமதாச அவரை விட 14 வயது இளையவர். சோமதாசா அப்போது தந்தை இல்லாத வீட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தார். வீட்டில் சேமதாச தங்கியிருப்பது சுனிலுக்கு பிடிக்கவில்லை. ஆனால், தாயாரை மீறி எதுவும் செய்ய முடியாமலிருந்தார்.

ஒரு நாள் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சோமதாச, ரோசலினை அடிப்பதை சுனில் பார்த்தார். சோமதாசவின் பிடியில் இருந்து தனது தாயை காப்பாற்றிய சுனில், சோமதாசவை கடுமையாக தாக்கினார்.

அவரை அடித்து, இனி வீட்டுப்பக்கம் வந்தால் கொன்று விடுவேன் என மிரட்டி கலைத்து விட்டார். அதன் பின்னர் சோமதாச அந்த வீட்டில் தங்கவில்லை. விரைவிலேயே திருமணம் செய்து, 2 குழந்தைகளின் தந்தையாக நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

“அப்பாவுக்கு என்ன நடந்தது என்று நான் எப்போதும் என் அம்மாவிடம் கேட்டேன். அம்மா சரியான பதில் சொல்லவில்லை. அம்மாவிடம் போலீசில் போய் புகார் கொடுக்கச் சொன்னேன். அம்மா என் மேல் ஏறி விழுந்தார். கோபத்தில் வெடித்த அம்மா, அந்த மனிதனை கொல்ல வேண்டுமா? என்றார்.

தந்தை பணிபுரிந்த குவாரியில் துப்பாக்கிப் வெடிமருந்துகளை திருடிய போது பொலிஸார் அவரைப் பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது தந்தை ஓடிவந்ததாகவும் தாய் தெரிவித்துள்ளார்.

அப்போது நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டது. உனக்கு வேண்டுமானால் அப்பாவைப் பற்றி போலீசில் சொல்லு என்றார் அம்மா. அப்பாவை பிடித்து கொன்று ரோட்டில் வீசிவிடுவார்கள் என்றார்.”

சுனில் அப்பாவைப் பற்றி விசாரிக்கப் போகும் போதெல்லாம் அம்மாவிடம் இருந்து இப்படி ஒரு பதில்தான் வந்தது. அதனால் நாளடைவில் தந்தையைப் பற்றிய தகவல்களைக் கேட்பதில் அதிக ஆர்வம் காட்டாமல் விடத் தொடங்கினார்.

ஜினதாசவின் குடும்ப உறுப்பினர்கள் வந்து கேட்டால், “என் கணவர் என்னை விட்டுச் சென்றுவிட்டார். நீங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை“ என்றார். காலப்போக்கில் இவையனைத்தும் எல்லோருடைய நினைவிலிருந்து விலகிப் போகிறது, நீண்டகாலத்தின் பின்னர் ரோசலின் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தபோது அவர் சொன்ன கதையுடன் ஜினதாசவின் நினைவு மீண்டும் எழுகிறது.

இதையெல்லாம் பொலிசார் முன்னிலையில் சுனில் குறிப்பிட்டாலும், தன் தந்தையைக் கொன்று புதைத்த இடம் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஜினதாச கொல்லப்பட்டார் என அத்தையிடமிருந்து தகவல் கிடைத்த பின்னரும், சுனில் தாயாரை சந்தித்து, தந்தை பற்றி கேட்டார்.

ஆனால் ரோசலினின் பதில் மாறவில்லை. தந்தை பொலிசாரிடமிருந்து தப்பி எங்கோ ஓடிவிட்டார் என வழக்கம் போல கூறினார். இவற்றையெல்லாம் ஆராய்ந்த போது ஜினதாசவின் காணாமல் போனதன் பின்னணியில் பெரிய மர்மம் இருப்பதை பொலிசார் உணர்ந்தனர்.

இதையடுத்து, பொலிசார் அன்னாசிவத்தையை சுற்றியுள்ள முதியவர்களைச் சந்தித்து 34 வருடங்களாக காணாமல் போயுள்ள ஜினதாசவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றனர்.

ஆனால் ஜினதாசவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அவர்கள் எவருக்கும் தெரியாது. ஜினதாச ஜேவிபி கலவரத்தில் பலியாகி விட்டதாக அனைவரும் நினைத்தனர்.

இதற்கிடையில் சுனிலும் தனது தாயை சந்தித்து தனது தந்தைக்கு என்ன நடந்தது என்று கேட்க கடந்த காலத்தை தோண்டத் தொடங்கினார். “அம்மா இன்னும் கொஞ்சக்காலத்தில் இறந்துவிடுவீர்கள். எனவே இப்போது உண்மையைச் சொல்லுங்கள். அப்பா இறந்து விட்டால் அவருக்குரிய இறுதிக்கடமைகளையாவது செய்யலாம்“ என சுனில் தன் தாயை உணர்வுபூர்வமாக அணுகிறார்.

தாயார் 34 வருடங்களின் முந்தையை சம்பவங்களை விபரிக்க ஆரம்பித்தார். அப்போது ரோசலன் தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய மளிகைக் கடை நடத்தி வந்தார். ஊர் மக்களைத் தவிர, அருகிலிருந்த எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் பீடி, வெற்றிலை வாங்க இங்கு வந்தனர்.

அப்படி வரும்போது சோமதாசவுக்கும், ரோசலினுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. சோமதாச, திருவானை எஸ்டேட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்ததோடு, கித்துல் தோட்டத்திலும் துப்புரவு தொழிலாளியாகவும் பணியாற்றினார்.

ரோசலினின் கடைக்கு வரத் தொடங்கிய சோமதாச, விரைவில் ரோசலினுடன் நெருக்கமாகி விட்டார். ஜினதாச வீட்டில் இல்லாத நேரத்தில் சோமதாச வீட்டுக்கு இரகசியமாக வந்து, ரோசலினுடன் உறவுகொள்ளத் தொடங்கினார்.

இந்த விடயம் ஜினதாசவுக்கு தெரிந்து விட்டது. மனைவியை கண்டித்தார். இனிமேல் இந்த உறவை தொடரக்கூடாது என கண்டிப்பாக கூறினார். ஒருநாள் சோமதாச வந்த போது, ஜினதாச கட்டிலில் உறக்கத்தில் இருந்தார். ரோசலின் ஒரு சாராயப் போத்தலை சோமதாசவிடம் கொடுத்து குடிக்குமாறு கூறினார்.

சோமதாச அரைப்போத்தல் சாராயத்தை குடித்தார். நல்ல போதை. அப்போது, ரோசலின் ஒரு கொட்டனை எடுத்து வந்து சோமதாசவிடம் கொடுத்தார். அதனால் ஜினதாசவை அடித்துக் கொலை செய்யுமாறு கூறினார்.

போதையிலிருந்த சோமதாச எதையும் சிந்திக்கும் நிலைமையில் இல்லை. ரோசலினை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள இதுதான் சரியான வழியென நினைத்து, உறங்கிக் கொண்டிருந்த ஜினதாசவின் தலையில் கொட்டனால் பலமுறை அடித்தார். தலை சிதைந்து, சம்பவ இடத்திலேயே ஜினதாச உயிரிழந்தார்.

ஜினதாசவின் உடல் மஞ்சள் படுக்கை விரிப்பில் சுற்றப்பட்டது. இருந்தாலும் இரத்தம் வடிந்து கொண்டிருந்ததால், மேலும் இரண்டு துணிகளால் சுற்றப்பட்டு, மலசலகூடத்துக்கு என வெட்டப்பட்ட குழிக்குள் போட்டு மூடப்பட்டது.

ஜினதாசவை கொன்று புதைக்க திட்டமிட்டு, ரோசலின் இந்த குழியை ஏற்கெனவே தயார் செய்திருந்தார். அன்று ஜினதாசவின் சடலத்தை சுற்றிய கட்டில் துணியின் நிறமும், அதில் பச்சை மற்றும் சிவப்பு நிற மலர் வடிவமும் ரோசலினின் நினைவில் இருந்தது. ஜினதாச நீல நிற கோடு போட்ட சட்டையும், மஞ்சள் நிற பெனியனும் அணிந்திருந்தார்.

இந்த விஷயங்களை அம்மா சுனிலிடம் கூறியிருந்தார். தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பற்றியும் கூறினார். அந்த இடம் இப்போது காட்டுக்குள் இருக்கிறது. அந்த இடத்தை அடையாளம் கண்டுகொண்ட சுனில் கடந்த 11ஆம் திகதி ஊருபொக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அம்மா சொன்னதை எல்லாம் சொன்னார். தந்தை காணாமல் போனது இனி மர்மம் இல்லை என்று கூறினார். இறுதியில் மொறவக்க நீதவான் நீதிமன்றில் அறிக்கையளித்து, 15ஆம் திகதி ஜினதாசவின் சடலத்தை மீட்பதற்கான அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நீதவான் துமிந்த பஸ்நாயக்கவின் மேற்பார்வையில் மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் புத்திக லெயில்வல கலந்துகொண்டார்.

ரோசலினை சம்பவ இடத்துக்கு சுனில் அழைத்து வந்தார். ஜினதாசவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ரோசலின் அடையாளம் காட்டினார். ஜினதாசவின் உடல் ஒரு மஞ்சள் துணியில் சுற்றப்பட்டிருக்கிறது என்று அங்கேயும் ரோசலின் சொன்னார். அங்கு ஏழெட்டு அடி ஆழம் தோண்டும்போது மஞ்சள் பூத்துணி வெளிப்படுகிறது.

34 ஆண்டுகளுக்குப் பிறகும், துணி அப்படியே இருந்தது. அதுமட்டுமல்லாமல் அன்று ஜினதாச அணிந்திருந்த நீல நிற கோடுகள் கொண்ட வெள்ளை நிற மேல்சட்டையும், மஞ்சள் பெனியனும் இருந்தன.

அதுமட்டுமல்லாமல் ஜினதாசவை போர்த்திய கதவு துணியும், ஜினதாச கட்டியிருந்த கருப்பு சாரமும் 34 ஆண்டுகளாக எந்த சேதமும் இல்லாமல் இருந்தது. என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

உடைகள் அழிக்கப்படாவிட்டாலும் ஜினதாசவின் சடலம் மக்கி விட்டது. சில எலும்புத் துண்டுகள் மட்டுமே காணப்பட்டன. கால் எலும்பு துண்டு, சில பற்கள் மட்டுமே இருந்தன. கழிவறை குழியில் இருந்து இவை அனைத்தையும் மீட்டெடுத்த பொலிசார், 34 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜினதாச கொலையில் ரொசாலின்ட் என்பவரை முதல் சந்தேக நபராக கைது செய்தனர்.

அதன் பிறகு சோமதாச கைது செய்யப்படுகிறார். 69 வயதான சோமதாச அப்போது தனது இரண்டு பிள்ளைகளுடன் ஹிரிபிட்டியவில் வசித்து வந்தார். ஜினதாச கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்ட இருவரும் மொறவ நீதவான் துமிந்த பஸ்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

“ரோசலினால்தான் இந்தக் குற்றம் நடந்தது. அவர் எனக்கு குடிக்கக் கொடுத்தார், அவரைக் கொல்லச் சொன்னார். நான் இல்லை என்றேன். அவர் வலியுறுத்தினார். அதனால் தான் ஜினதாசவை கட்டையால் அடித்து கொன்றேன்.

உடலை அடக்கம் செய்யும் இடத்தையும் அவர்தான் காட்டினார்” என சோமதாச மாஜிஸ்திரேட் முன் அனைத்தையும் ஒப்புக்கொண்டார். ரோசலின் “நான் இறக்கும் நிலையில் கூட நான் செய்த குற்றத்திற்காக நான் தண்டிக்கப்பட்டேன்” என்று நீதிவான் முன்னிலையில் கூறினார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US