அரசாங்க அலுவலகத்தில் இப்படியா? விளாசும் நெட்டிசன்கள்!
அம்பாறை அரசாங்க அலுவலகம் ஒன்றில் செயன்முறை பரீட்சைக்காக பெப்ரவரி 30ஆம் திகதி வருகை தருமாறு வழங்கப்பட்டுள்ள பற்றுச்சீட்டு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
ஒவ்வொரு வருடத்திலும் பெப்ரவரி மாதத்தில் 28 அல்லது 29 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பது உலகறிந்த விடயம்.
இந்நிலையில் நம்முடைய இலங்கையில் அதுவும் அம்பாறையில் மட்டும் தான் பெப்ரவரி மாதம் 30 நாட்கள் வருகிறதாக என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேவேளை நாட்காட்டியில் லிப் வருடத்தில் மாத்திரம் 29 நாட்கள் வரும் அதுவும் நான்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும். இந்த நிலையில் அம்மாறையில் மட்டும் எங்கிருந்து பெப்ரவரி மாதத்தில் முப்பது நாட்கள் வந்தது எனவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.