யாழில் காலாவதியான் குளிபானத்திற்கு 30 ஆயிரம் அபராதம்
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பகுதி வர்த்தக நிலையங்களில் அண்மையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
கடுமையாக எச்சரித்த மன்று
அதன் போது வர்த்தக நிலையம் ஒன்றில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர் ஒருவர் கண்டறியப்பட்டு, அவருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைகளை நேற்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வர்த்தகர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த யாழ் நீதிமன்று , 30 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் செலுத்த உத்தரவிட்டது.