அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க மிகவும் கவனமா இருக்கணுமாம்
கிரகங்கள் சீரான இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, நட்சத்திரங்களையும் மாற்றும்.
அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது சதயம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.
இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 17 ஆம் திகதி வரை பயணிப்பார் என கூறப்படுகிறது.
சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிப்பதால் சனி மற்றும் ராகுவால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஏனெனில் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு.
எனவே அக்டோபர் வரை சில ராசிக்காரர்கள் சனி ராகுவால் மோசமான பலன்களைப் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அக்டோபர் வரை பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளக்கூடும்.
ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
கடைகளில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இக்காலத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதால், வீட்டு செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டியிருக்கும்.
எந்த ஒரு புதிய வேலையையும் அக்டோபர் வரை தொடங்காதீர்கள்.
முதலீடு செய்வதாக இருந்தால், நன்கு சிந்தித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதம் வரை தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும்.
இதனால் இந்த ராசிக்காரர்களின் பட்ஜெட் பாதிக்கப்படும்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, முழங்கால் தொடர்பான பிரச்சனையால் அவதிப்படக்கூடும்.
வாழ்க்கைத் துணையுடன் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தேவையில்லாத பயணங்களை செய்ய வேண்டியிருக்கும்.
பணிபுரிபவர்கள் அக்டோபர் வரை சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் உடன் வேலை செய்வோருடன் நிறைய கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அக்டோபர் வரை தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
அரசு வேலை செய்பவர்கள் உயர் அதிகாரியுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கக்கூடும்.
காதலிப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுவிடும்.
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
மேலும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.