சனிபெயர்ச்சியால் அதிகளவில் நன்மை பெறவுள்ள 3 ராசிகள் ; எந்தெந்த ராசிகள் தெரியுமா?
ஏப்ரல் மாதத்தில் சனிபகவானின் ராசி மாறப்போகிறது. சனியின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், நல்லது நடக்கும். மூன்று ராசிக்காரர்கள் சனிபகவானின் தீய பார்வையில் இருந்து விடுதலை பெற உள்ளனர்.
2022ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால், இந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம். நம் கர்மாவுக்கு ஏற்றவாறு பலன்களைக் கொடுப்பவராகவும், நீதியின் கடவுளாகவும் சனீஸ்வரன் கருதப்படுகிறார். தற்போது மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் தசையும், தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிம் தாக்கமும் உள்ளது.
2022-ல் சனி பகவானின் ராசி மாற்றம் எப்போது நிகழும்? ஏப்ரல் 29, 2022 வெள்ளிக்கிழமை, சனி பகவான் மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசியில் நுழைகிறார். சனியின் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
மிதுனம்:
சனிபகவான் ராசி மாறியவுடன் மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் தீய தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். சனியின் தாக்கம் நீங்கியவுடன் உங்கள் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் குறையும். பணியில் இருந்த தடைகள் நீங்கும். பண ஆதாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய பொறுப்பு கிடைக்கும். பணியிடத்தில் நல்ல பெயரும் மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்
துலாம்:
துலா ராசிக்காரர்கள் தற்போது சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஏப்ரல் 29 ஆம் திகதி சனி ராசி மாறுவதால் இது முடிவுக்கு வரும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு நீங்கள் எந்தெந்த பணிகளிலெல்லாம் பிரச்ச்னைகளை எதிகொண்டு வந்தீர்களோ, அவற்றில் நிம்மதி கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளனர். ஏப்ரல் 29, 2022 அன்று சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு, தனுசு ராசிக்காரர்கள் சனியின் பாதகமான தாக்கத்திலிருந்து விடுதலை பெறுவார்கள்.
பல நல்ல பலன்களைப் பெறுவார்கள். பண ஆதாயத்தால் கௌரவம் உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.