உயிரிழந்த சிறுவனின் அறிக்கையில் முரண்பாடு; விசாரணைக்கு உத்தரவு!
பொரளை லேடிரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மருத்துவ அறிக்கைகளுக்கும் பிரேதபரிசோதனை அறிக்கைகளுக்கும் முரண்பாடு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி சிறுவனின் சிறுநீரகங்கள் குறித்து மருத்துவ அறிக்கைகளுக்கும் பிரேதபரிசோதனை அறிக்கைகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடு குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவனிற்கு இரண்டு சிறுநீரகங்கள்
இந்த உத்தரவை பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய பிறப்பித்துள்ளார்.
மருத்துவபரிசோதனைகளில் சிறுவனிற்கு இரண்டு சிறுநீரகங்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும் எனினும் பிரேதபரிசோதனையில் ஒரு சிறுநீரகம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் வேண்டுகோளை தொடர்ந்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மருத்துவபரிசோதனை அறிக்கை இரண்டுசிறுநீரகங்கள் என தெரிவிக்கும்போது பிரதேசபரிசோதனை அறிக்கையில் ஒரு சிறுநீரகம் என ஏன் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அது விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.