100 ஆண்டுகளுக்குப் பின் ஒரே ராசியில் இணையும் 3 கிரகங்கள் ; இந்த ராசிகளுக்கு இனி ஜாக்பொட் தான்
அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் மூன்று கிரகங்களின் மகா சேர்க்கை நிகழவுள்ளது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகத்தை பெற உள்ளனர். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 3 கிரகங்கள் இணைந்து துலாம் ராசியில் மகா சேர்க்கையை நடத்த உள்ளன.
கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பகவான் அக்டோபர் 3 ஆம் திகதி துலாம் ராசிக்குள் நுழைந்து, அக்டோபர் 24 வரை அங்கேயே இருப்பார். சூரிய பகவான் அக்டோபர் 17 ஆம் திகதி துலாம் ராசிக்குள் நுழைந்து நவம்பர் 19 வரை அங்கேயே இருப்பார். இந்த சமயத்தில் செவ்வாய் பகவானும் துலாம் ராசியில் பயணிக்கிறார்.
மகா சேர்க்கை
மூன்று கிரகங்களும் சுப கிரகங்களாக கருதப்படுவதால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் அதிக பலன்களை பெற உள்ளனர்.
துலாம் ராசி : இந்த மகா சேர்க்கை நடைபெறும் காலகட்டத்தில் உங்களது நம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.உங்கள் நடத்தை, பேச்சு, இனிமையான தன்மையால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். தனிமையை அனுபவிப்பவர்கள் புதிய காதல் உறவில் நுழையலாம். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை துலாம் ராசிக்காரர்கள் அனுபவிக்கலாம்.
கடக ராசி : இந்த காலகட்டத்தில் நீங்கள் பொன், பொருள் போன்றவற்றை பெரும் வாய்ப்புகள் உண்டு. புதிய வீடு, வாகனம், மனை வாங்கும் யோகம் உண்டு. வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் சொந்த வீடு கட்டும் யோகம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம்.
நிலுவையில் இருந்த கடன்கள் தீரலாம். வெவ்வேறு வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். திருமணமான பெண்களுக்கு கணவர் குடும்பத்துடனான உறவு வலுவாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.
ரிஷப ராசி : இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எதிர்பாராத திடீர் பண வரவுகள் ஏற்படலாம். உங்கள் நிதி நிலைமை திடீரென அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்கள் மன அமைதியை பெறுவார்கள். சக ஊழியர்களுடன் உறவுகள் மேம்படும்.
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்த காலகட்டத்தில் உங்கள் ஆளுமையிலும் நீங்கள் கவர்ச்சிகரமான மாற்றங்களை காண்பீர்கள்.