இலங்கையில் இந்த கொடிய நோயால் நாளாந்தம் 3 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் வாய் புற்றுநோயினால் தினமும் 3 பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நாளாந்தம் சுமார் 6 வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக அவர் கூறினார்.
வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வைத்தியர் நிலந்த ரத்நாயக்க இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் 5 வயதுடைய குழந்தைகளில் 63 வீதமானோர் பற்கள் சிதைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பாலான குழந்தைகள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்குவதில்லை என பாடசாலை சுகாதார ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.