நாட்டில் காலாவதியாகும் நிலையில் 3 மில்லியன் சீன தடுப்பூசிகள்!
நாட்டில் பயன்படுத்தப்படாத நிலையில் சீனாவின் 3 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி. வீரசிங்க தெரிவித்துள்ளார்.
26 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளில் 23 மில்லியன் டோஸ்கள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் ஏஞ்சியுள்ள தடுப்பூசிகள் காலாவதியான பின்னர் அகற்றப்படும் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களிற்கு அவற்றை செலுத்துமாறு நாங்கள் சுகாதார அமைச்சினை கேட்டுக்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறிப்பிடத்தக்க அளவு பைசர் தடுப்பூசிகளும் இன்னமும் செலுத்தப்படாத நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர் , இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் கூறினார்.