சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மூவர் இலங்கைக்கு!
ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் பிரதான சகாக்களில் ஒருவரான 'ரத்மலானை சைமா' உள்ளிட்ட மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரி ஒலுவில உள்ளிட்ட விசேட காவல்துறை குழுவினரால் குறித்த சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர், பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'கஞ்சிபாணி இம்ரான்' என்பவரின் பிரதான உதவியாளர் என்பது மட்டுமன்றி இவர் தொடர்பில் சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) மூலம் சிவப்பு அறிவித்தலும் (ரொட் நோட்டீஸ்) வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்களுக்கு எதிராக கொலைகள் மற்றும் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.