மன்னாரில் இடம்பெற்ற இரட்டைக்கொலை... இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது!
மன்னாரில் சமீபத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்றையதினம் (19-01-2025) தெரிவித்தனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கி ஏந்தியவர் எனவும், அவர் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரராக சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்களும் குற்றச் செயல்களுக்கு உதவியவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனவரி கடந்த 16-01-2025 ஆம் திகதி காலை இன்று காலை 9.20 மணியளவில் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிதாரிகள் ஸ்கூட்டரில் வந்து கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.