சூடானில் இருந்து மீட்கப்பட்ட 2ஆவது இலங்கை குழு!
சூடானில் இருந்து மீட்கப்பட்ட ஆறு பேர் கொண்ட இரண்டாவது இலங்கை குழுவினர் சவுதி அரேபியாவின் ஜெடாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெடாவில் உள்ள கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், அவர்கள் அங்குள்ள பதில் தூதரகப்பிரிவு அதிகாரியினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சவுதி அரேபியாவினால், சூடானில் நிறுவப்பட்டுள்ள தற்காலிக செயல்பாட்டு காரியத்திற்கு வருமாறு அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு இலங்கையின் வெளிவகார அமைச்சு அறிவித்தல் விடுத்திருந்தது.
தற்போது சூடானில் யுத்த பிரதேசத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் சவுதி அரேபியாவின் தலையீட்டுடன் விருந்தகம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியில் அவர்களுக்கான தொலைபேசி அழைப்பு வசதியை ஏற்படுத்த முடியாது உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்காக சவுதி அரேபிய தூதரகத்தில், அதிகாரி ஒருவர் இணைப்பு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், தகவல்களை வழங்குவதற்காக, 00 24 99 99 10 757 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.