உலக நாடுகளுக்கு பேரிடியை இறக்கிய ஈரான் ; ஹோர்முஸ் நீரிணையில் ஒரு கப்பலுக்கு 60 கோடி ரூபாய் கட்டணம்
ஹோர்மூஸ் நீரிணை வழியாக பயணிக்கும் ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 60 கோடி இலங்கை ரூபாய்) கட்டணமாக அறவிட ஈரான் தீர்மானித்துள்ளது.
ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அலாதீன் போரூஜெர்டியை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

ஹோர்மூஸ் நீரிணை
ஹோர்மூஸ் நீரிணையில் ஒரு புதிய ஆட்சி நிறுவப்பட வேண்டுமெனவும், இந்தப் போர் எதிர்த்தரப்பினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அலாதீன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் ராடார் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், கப்பல்களைக் கடற்கரைக்கு நெருக்கமாக வரச்செய்து ஈரானிய கடற்படையினர் அவற்றை நேரடியாகச் சோதனையிட்ட பின்னரே அனுமதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளின் கப்பல்கள் ஈரானின் 'பாதுகாப்பான வழித்தடத்தை' பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாகவும், அதேவேளை மேற்கத்திய நாடுகளின் கப்பல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு விதித்த தடையை நீக்க ஈரானுக்கு 22 நாடுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.