மதுரை ஆதீனத்தின் 293 ஆவது ஆதீனம் பொறுப்பேற்பு
சைவசமய முதன் நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் 293 ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நேற்றைய தினம் பொறுப்பேற்றார்.
குறித்த நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய ஆதீனங்கள் கலந்துகொண்டு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து ஆசி வழங்கியிருந்தனர். மதுரை ஆதீனத்தின் 292 ஆவது ஆதீனமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 13 ஆம் திகதி காலமானர்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 293 ஆவது மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து நேற்று அவருக்கு முடிசூட்டும் நிகழ்வு தருமபுர ஆதீனத்தின் 27 ஆவது குரு மகா சன்னிதானம் கைலை மாசிலாமணி ஞானதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இடம்பெற்றிருந்தது.