28 இலங்கை இராணுவத் தளபதிகளுக்கான சர்வதேச தடைக்கு பிரபல நாடுகள் ஆதரவு
இலங்கையின் 28 இராணுவத் தளபதிகள் மீது சர்வதேசத் தடைகளை விதிக்குமாறு 17 மேற்குலக நாடுகளுக்கு ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மனித உரிமைகள் பேரவையில் உள்ள 11 நாடுகள் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ஜெனீவா அறிக்கையின்படி, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, மாசிடோனியா மற்றும் மொன்டெனெக்ரோ ஆகிய நாடுகள் தங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க உறுதியளித்துள்ளன.
எனினும், தடை விதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை விசாரணையின்றி தடைகளை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானத்தை கொண்டுவர பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.