மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட 27 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
மியன்மாரில் மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்ட 8 பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட இலங்கையர்கள் குழு இன்று (16) நாடு திரும்பியுள்ளனர்.
தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மியன்மாரில் மனித கடத்தல்காரர்களின் பிடியில் 14 இலங்கையர்கள் அடங்கிய குழு தொடர்ந்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், மியான்மரில் மனித கடத்தல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 63 இலங்கையர்கள் வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளனர்.
சுரண்டல் மற்றும் ஆட்கடத்தலுக்கு எதிராக பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு வெளிநாட்டு வேலை தேடும் அனைத்து நபர்களுக்கும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.