நண்பரை நம்பிசென்ற 26 வயது யுவதிக்கு நேர்ந்த கொடுமை ; நால்வர் கைது!
26 வயது யுவதியை தபால் நிலைய ஊழியர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு தபால் நிலைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் கைதானவர்கள் ருவான்வெல்ல மற்றும் இம்புலான பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களாவர். பாதிக்கப்பட்டவர் கன்னந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய யுவதியாவார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நண்பர்களும் துஸ்பிரயோகம்
பாதிக்கப்பட்ட யுவதி கடந்த 26 ஆம் திகதி தனது தாயுடன் ருவான்வெல்ல பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்தியம் ஒன்றிற்கு சென்றிருந்துள்ளார்.
அங்கு தபால் நிலையத்தில் வைத்து அறிமுகமான இளைஞர் ஒருவருடன் நட்பாக பழகி வந்த நிலையில் இளைஞன் யுவதியை கன்னந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அதன் பின்னர் தபால் நிலையங்களில் கடமையாற்றும் தனது 3 நண்பர்களையும் அழைத்து வந்த நிலையில் சந்தேக நபர்கள் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட யுவதி இது தொடர்பில் குடும்பத்தினருக்கு எதுவும் தெரிவிக்காத நிலையில், தபால் நிலைய ஊழியர் வீட்டிற்கு யுவதி சென்றிருந்தமை தொடர்பில் யுவதியின் மூத்த சாகோதரிக்கு நபரொருவர் மூலம் தெரியவந்துள்ளது.
மூத்த சகோதரி இது தொடர்பில் தனது இளைய சகோதரியிடம் விசாரித்த போது அவர் சம்பவத்தன்று நடந்த விடயங்களை கூறியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் சம்பவம் தொடர்பில் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
சம்பவம் ட் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவான்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.