இலங்கையில் மோசமான செயலில் ஈடுபட்ட 24 ஜோடிகள்: பொலிஸார் விடுத்த எச்சரிக்கை
ஹோமாகம பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான தோட்டத்தில், சிறிய அறைகளுக்குள் வயது குறைந்தவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக பொலிஸார் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைபாடுகளுக்கு அமைய அவ்விடத்தை இன்று (24-09-2023) ஞாயிற்றுக்கிழமை சுற்றிவளைத்ததாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த சுற்றிவளைப்பின் போது, சிறிய அறைகளில் 24 ஜோடிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்னும் பல ஜோடிகள் இருப்பதாக கண்டறிந்ததை அடுத்து, அந்த ஜோடிகளை அழைத்து, அவர்களுக்கு நிலைமையை விளக்கி, ஆலோசனைகளை வழங்கியதன் பின்னர், சிறுமிகளின் பெற்றோர்களுக்கு அலைபேசியூடாக அழைப்பை ஏற்படுத்தி, நிலைமையை எடுத்துக்கூறி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கள் குழந்தைகளுடன் அந்த பூங்காவுக்கு செல்லும் போது, பாடசாலைகளுக்குச் செல்லும் வயதை ஒத்தவர்கள் அந்த தோட்டத்தில் மறைக்கப்பட்டிருக்கும் சிறிய அறையகளில், தவறான செயலில் ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், மதத்தலைவர்கள் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் கட்டளையின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.