ஜப்பானில் உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 22 பேர் காயம்
இன்று அதிகாலை 1:04 மணியளவில் ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐச்சி மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன. எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

நிலநடுக்கம்
இந்த திடீர் நிலநடுக்கம் காரணமாக ஐச்சி மற்றும் ஷிசுவோகா மாகாணங்களில் குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளனர்.
அப்பகுதிகளில் இருந்த பல கடைகளின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து வீதிகளில் சிதறின.
நூலகங்கள் மற்றும் கடைகளில் இருந்த புத்தகங்கள் அலமாரிகளிலிருந்து கீழே விழுந்து குவிந்தன.
நிலநடுக்கம் ஏற்பட்ட ஷிசுவோகா மாகாணத்தில் உள்ள ஹமாோகா அணுமின் நிலையத்தில் எந்தவிதமான சேதமோ ஆபத்தோ ஏற்படவில்லை என சோதனைகளில் தெரியவந்துள்ளது.