வீடொன்றில் 21 வயது யுவதியின் மோசமான செயல்; அம்பலமான தகவல்
ஹட்டன் , எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 195,000 ரூபாய் பணத்தை திருடிய 21 வயது யுவதி ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் கூறியுள்லனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனியார் நிறுவனத்தில் பணி
அதே பிரதேசத்தை சேர்ந்த யுவதி, அயல் வீட்டிற்குச் சென்று, அந்த வீட்டில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை களவாடியுள்ளார்.
அதோடு 95,000 ரூபாயை ஹட்டன் பகுதியில் உள்ள இலங்கை வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெற்றுக் கொண்டு, பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தேயிலை மலையில் வீசியமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பணத்தின் உரிமையாளருக்கு , யுவதி மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, நேற்று மாலை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த ஹட்டன் பொலிஸார், யுவதியை கைது செய்ததோடு, சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பணத்தையும் மீட்டனர்.
சந்தேக நபரான யுவதி ஹட்டன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட யுவதி இன்று (19) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.