கொழும்பில் திடீர் தீ விபத்தில் 21 வீடுகளுக்கு நேர்ந்த சோகம்
Srilanka
Police
Accident
Colombo
House
Fire
Damaged
By Independent Writer
கொழும்பு - தொட்டலங்க – கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றிரவு 12.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தீ பரவிய தகவல் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்டதையடுத்து, குறித்த பகுதிக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US