2024 எல்.பி.எல் கிரிக்கெட்... ஜப்னா கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற காலி மார்வல்ஸ்!
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் காலி மார்வல்ஸ் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்றது.
ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 59 ஓட்டங்களையும் பாத்தும் நிஸ்ஸங்க 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் காலி மார்வல்ஸ் அணி சார்பில் ஜாகூர் கான் 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி மார்வல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியுள்ளது.
காலி மார்வல்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் 65 ஓட்டங்களையும், அணியின் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் அசித்த பெர்னாண்டோ
மற்றும் ஃபேபியன் ஆலன்
ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.