வெளியானது பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்கள் 2 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாகவே அல்லது மின்னஞ்சல் மூலமாகவே அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஏதேனும் மேன்முறையீடு இருந்தால் அதனை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இரணடாம் இணைப்பு
2021 க.பொ.த. (உ/த) பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, வெட்டுப்புள்ளிகளின் மதிப்பெண்களை www.ugc.ac.lk இல் பார்வையிட முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.

நுழைவு மதிப்பெண்களை www.ugc.ac.lk இல் பார்க்கலாம்