குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள்!
செல்லுபடியாகும் விசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டு, இன்று (20) அதிகாலை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் ஆரம்பத்தில் வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காகக் குவைத்திற்குச் சென்றிருந்தனர்.
ஆனால், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களிலிருந்து தப்பிச் சென்று வேறு இடங்களில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் குவைத் நகரிலிருந்து ஜசீரா ஏர்வேஸ் விமானம் J9-551 மூலம் அதிகாலை 3:10 மணிக்கு வந்தடைந்தனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தாயகம் திரும்பியவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு நிதியுதவியையும் போக்குவரத்து வசதிகளையும் வழங்கியது