இவரை தெரியுமா? தகவல் கொடுப்போரிற்கு 20 லட்சம் சன்மானம்!
இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய கொழும்பு - தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபரின் பல புகைப்படங்களை பொலிஸார் நேற்று (25) ஊடகங்களில் வெளியிட்டுள்ள நிலையில் அவரை காட்டிக்கொடுப்போருக்கு 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கம்
சந்தேக நபர், 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெரார்ட், தெமட்டகொட பிரதேசத்தில் வசிப்பவர், சுமார் 05 அடி 06 அங்குலம் உயரம் கொண்டவர்.
குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் 071-8591753 அல்லது நிலைய கட்டளைத் தளபதி 071-8591774 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு 20 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் எனவும், தகவல் வழங்குபவரின் விபரங்கள் இரகசியத்தன்மையுடன் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் இலங்கையை சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, மீண்டும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், ஈஸ்டர் ஆணைக்குழுவில் பெயர்கள் உள்ளடங்கிய குழு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் நிலைய பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.