இலங்கையில் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இருவர்!
கொழும்பு - வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் மாத்தறையில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, பதுளையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வவிபத்தில் தெயியன்வல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.