இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட 19,688 சிறுவர்கள் கொரோனாவால் பாதிப்பு
நாட்டில் 10 வயதிற்குட்பட்ட 19,688 சிறுவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
10 மற்றும் 18 வயதிற்கு இடைப்பட்ட 26,143 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் 14 வயதிற்கு கீழ்ப்பட்ட 14 சிறுவர்கள் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சிறுவர்களுக்கு பைஸர் - BioNTech தடுப்பூசியை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர், எனினும் இறுதி முடிவு தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழுவால் எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.