189 ஆண்டுகளுக்கு முன் திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி அரச வர்த்தமானியில் தெரிவித்தது என்ன?

Colombo Gazatte Trincomalee Sri Lanka Government Gazette
By Shankar Sep 27, 2022 09:21 AM GMT
Shankar

Shankar

Report

இலங்கைத் தீவில் நினைவுக் கெட்டாத காலம் முதல் இந்து சாதியினர் வாழ்ந்து வருகிறார்கள்' என்று அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு காரணமாகவிருந்த திருகோணமலையில் இருக்கும் கோவில்.  

மதவெறி கொண்ட போத்துக்கீயர் 1622 ம் ஆண்டு தங்களது கோட்டை ஒன்றைக் கட்டுவதற்காக இக்கோவிலை இடித்துதுத் தள்ளியும் இற்றை நாளிலும் இக் கோவில் வணக்கத்துக்குரிய புனிதஸ்தலமாக விளங்கிவருகிறது.

189 ஆண்டுகளுக்கு முன் திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி அரச வர்த்தமானியில் தெரிவித்தது என்ன? | 189 Years Back Thirukoneswaram Kovil Govt Gezatte

சிலகாலத்திற்கு முன் ஓர் தண்பனின் உதவியுடன் கவி ராஜவரோதயன் என்ற புலவரால் தமிழில் எழுதப்பட்ட சிறிய பாடலொன்றின் கையெழுத்துப் பிரதியைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.

இக் கவிதையில் நம்பத்தகாத சில அம்சங்கள் இருந்தாலும் இப்புனித ஆலயத்தின் ஆரம்பகாலத்தையும் வரலாற்றையும் இது விளக்குகின்றது.

எனவே இக்கவிதையிற் சொல்லப்பட்ட வரலாற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஆவல் எனக்கேற்பட்டது. பொது மக்கள் அறிந்து கொள்வதற்காக அத்தகவலை இங்கு சமர்ப்பிக்கிறேன்..

சோழ மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்த மனு நீதி கண்ட சோழன் என்ற அரசன் கைலாச புராணத் திலிருந்து திருகோணமலையின் அற்புதங்களையும் அங்கு வாழும் மக்களின் சிறப்புக்களையும் அறிந்து அவ்விடத் துக்கு வந்தான்.

189 ஆண்டுகளுக்கு முன் திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி அரச வர்த்தமானியில் தெரிவித்தது என்ன? | 189 Years Back Thirukoneswaram Kovil Govt Gezatte

அவனைப் பின் தொடர்ந்து வந்த அவனது மகன் குளக்கோட்டு மகாராஜாகலியுக வருடம் 512 வது ஆண்டு (கிறிஸ்துவுக்கு முன் 1589-ம் ஆண்டு ) வைகாசி மாதம் பத்தாம் நாள் திங்கட்கிழமை, தெப்பக்குளம் போன்றவற்றை ஏற்படுத்தி இக் கோவிலைப் புனருத்தாரணம் செய்வித்தான்.

கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின் கோவிலின் நாளாந்த தேவைக்கு அரிசி மற்றும் பொருட்களை சோழ மண்டலத்திலிருந்து வரவழைப்பதிலுள்ள கஷ்டங்களை அரசன் உணர்ந்தான்.

அதனால் 2800 அமோனம் காணியை நெல் விளைச்சலுக்காக பண்படுத்தி அக்காணிக்கு நீர்ப்பாசன வசதி செய்வதற்காக ஓர் குளத்தையும் கட்டுவித்து கோணேசர்சுவாமிக்கு அதைக் காணிக்கையாக்கினான்.

189 ஆண்டுகளுக்கு முன் திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி அரச வர்த்தமானியில் தெரிவித்தது என்ன? | 189 Years Back Thirukoneswaram Kovil Govt Gezatte

அதன் பின் அவன் வடக்கேயுள்ள மருகூர் என்னும் கிராமத்திற்கு சென்று கலியுகம் 516ம் ஆண்டு பங்குனி 24ம்தேதி ஏழு வேளாள குடும்பத்தினரை திருக்கோணமலைக்கு அழைத்து வந்து குடியமர்த்தினான். அவர்களுக்கு கோவிலும் அதற்குச் சொந்தமான காணிகளும் மரபு வழியாகச் சேர வேண்டியது என்பதை உறுதிப்படுத்தினான்.

கோவில் சொத்துக்களை பராமரிக்கவும் வரவு செலவுகள் விழாக்கள் நடத்துதல் அரசர்களுக்கு பட்டுடை தரித்தல் போன்றவற்றை கவனிக்கும் பொறுப்புக்களும் இக்குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கோவில் தொண்டுகளுக்கு மேலும் ஆட்கள் தேவைப்பட்டதால், குளக்கோட்டு மன்னன், காரைக்காடு என்னும் கிராமத்துக்கு சென்று கட்டாயமாக 20 குடும்பங்களை கொண்டுந்து மேற்கூறப்பட்ட அதே ஆண்டில் வைகாசி 10ம் நாள் குடியேற்றி சிவலிங்கத்தை அலங்கரித்தல் ஆலயத்துக்கு மலர்கள் சேகரித்தல் ஆலயத்தை நாளாந்தம் பெருக்கி சுத்தமாக்குதல், அபிஷேகத்துக்கு தண்ணீர் அள்ளிக் சொடுத்தல், நெல்லுக்குத்துதல், கோவிலை' சாணி கொண்டு மெழுகுதல் தேவாரம் ஓதுதல் மேள வாத்தியம் நாதஸ்வரம் வாசித்தல், வேள்விக்கு உதவி செய்தல், விசேட கனங்களில் கொடி ஏற்றுதல் இறக்குதல், சந்தனம் அரைத்தல், கோவில் ஆபரணங்களை புடம் போடுதல் போன்ற வேலைகளுக்கு நியமித்தான்.

189 ஆண்டுகளுக்கு முன் திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி அரச வர்த்தமானியில் தெரிவித்தது என்ன? | 189 Years Back Thirukoneswaram Kovil Govt Gezatte

இம்மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய நிலம் அளிக்கப்பட்டதுடன், இவர்களில் ஐந்து பேர் தெரிந்தெடுக்கப்பட்டு பண்டாரத்தார்' என சிறப்பாக அழைக்கப்பட்டனர்.

முதல் கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட ஏழு குடும்பத்தினரும் தானாட்டார்' என்றும், அதற்கு பின் குடியமர்த்தப்பட்ட 20 குடும்பத்தினரும் வாரி பட்டர்' என்றும் குறிப்பிடப்பட்டனர்.

"வாரிபட்டர்களுக்கும் தானாட்டாருக்குமிடைமிடையே ஏதாவது தகராறு ஏற்படும் போது நீதி வழங்குவதற்கு ஒரு வருமில்லையென்பதை உணர்ந்த அரசன், அவர்களுக்குத் தலைவராக ஒருவரை நியமனம் செய்ய முடிவு செய்தான்.

189 ஆண்டுகளுக்கு முன் திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி அரச வர்த்தமானியில் தெரிவித்தது என்ன? | 189 Years Back Thirukoneswaram Kovil Govt Gezatte

அதனால் மதுரை சென்று தனியுண்ண பூபாலன் என்ற பேரறிஞரை அழைத்து வந்து அவருக்கு வன்னியன் பட்டம் சூட்டி திருக்கோணமலையின் கவர்னராக நியமித்தான்.

குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கவும், சிறைக்கனுப்பவும் தேவையானால் மரண தண்டன விதிக்கவும், கோவில் காரியங்கள் தவறேதுமின்றி நடைபெற வேண்டிய நடவடிக்கையெடுக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

அத்துடன் கட்டுக்குளம் மக்கள் தங்கள் சேவையை கோவிலுக்கு கட்டாயமாக அளிக்க வேண்டுமென்றும், நிலா வெளிமக்கள் கோவில் விழாக்களுக்கு தலைமை தாங்க வேண்டுமென்றும், கோவிலுக்கு ஆறு அமோனம் நெல்லும், கிடைக்கும் வரிப்பணத்திலும் வாணிக வரிப்பணத்திலும் பத்திலொருபங்கும் கோவிலுக்கு கொடுக்க வேண்டுமென்றும் கொட்டியாரத்து கிராம மக்கள், கோவிலுக்கு வெற்றிலை, வாழைப்பழம் சந்தனக் கட்டை , தயிர், நெய், 100 அமோனம் அரிசி, ஆமணக்கு, புன்னை, இலுப்பை விதைகள் வழங்க வேண்டுமெனவும் அரசன் கட்டளையிட்டான்.

கடைசியில் குறிப்பிடப்பட்ட விதைகள், ஐரதீவு மக்களிடம் கொடுக்கப்பட்டு எண்ணையாக்கப்பட்டவுடன், அந்த எண்ணை செவுளி முனை தொட்டியனிடம்" தரப்படவேண்டும்.

அவன், எண்ணையின் அளவை கோவில் கணக்கில் பதிந்த பின்னர் எண்ணையை கோயில் களஞ்சியத்தில் ஊற்றிவைக்க வேண்டும். இவ்வெண்ணை கோவில் விளக்குகள் எரிக்கப் பயன்படுத்தப்படும். 'கோவிலின் தெற்கு புறத்தில் எண்ணையை ஊற்றி வைப்பதற்காக ஏழு களஞ்சியங்கள் கட்டப்பட்டிருந்தன.

இவற்றை மேற்பார்வை செய்ய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தான், இந்த உத்தரவுகள் விடப்பட்ட பின்னர் மன்னன் கோவில் உள் விவகாரங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.

நாளாந்தம் 1000 நெய் விளக்குகளும், 11,000 எண்ணெய் விளக்குகளும் கோவிலின் உள்ளும் புறமும் ஏற்றப்பட வேண்டும் என்று கோவில் ஊழியர்களுக்கு கட்டளையிட்டான் கோவில் மண்டபமெங்கும் கஸ்தூரியும் சந்தனமம் கலந்த ரோஜாப்பூ பன்னீர்தெளிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட காலங்களில் நிவேதனத்துக்கு தயிர் சாதம் தயாரிக்க வேண்டுமென்றும், சுப் பிரமணியருக்கு 12 வெள்ளித் தாம்பாளங்களிலும், பிள்ளையாருக்கு 6 வெள்ளித் தாம்பாளங்களிலும், மீதியுள்ள தெய்வங்களுக்கு 128 செப்புத்தாம்பளங்களிலும் நிவேதனம் படைக்கவேண்டுமெனவும் உத்தரவிட்டான்.

அத்துடன் நிவேதனத்துக்கு பல ஆயிரக்கணக்கான அமுது உருண்டைகள் தயாரிக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்ட விசேட தினங்களில் ஆயிரம் தகழிகளையுடைய கற்பூர ஆரத்தி காட்டப்பட வேண்டுமென்றும் பணித்தான்.'

அரசன் ஒரு நாள் கோவில் புனித குளத்தில் நீராடி தனது பூஜை பிரார்த்தனைகளை முடித்து விட்டு, தனது தலையில் ஓர் உருத்திராட்ச மாலையணிந்து நெற்றியில் திரு நீறணித்து, இருகைகளிலும் மலர்கள் ஏந்தியபடி கோவில் பிரசாரத்தை சுற்றி வந்து மூலஸ்தானத்துள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்த அரசன் வெகு நேரமாகியும் வெளியே வராததைக்கண்ட அவனது மெய்காப்பாளர்கள், சந்தேகங்கொண்டு உள்ளே நுழைந்த போது கடவுளின் திருவுருவத்தின் முன்னே அவன் ஓர் தாமரை மலராக உருமாறியிருந்ததைக் கண்டு பிரலாபிக்கத் தொடங்கினர்.

திருமூலர் மறைந்ததற்கும் அரசன் மலராக உருமாறியதற்கும் ஒரு இரத்த தொடர்பு இருக்கிறது. அதே போல குளக்கோட்டு மகாராஜாவும் கடவுளில் ஒருவராகி விட்டார்.

திருகோணநாதமலை மக்கள் அவருக்கு தங்கள் நன்றியைக்காட்டத் தயங்கவில்லை. குளக்கோட்டு மகாராஜாவின் உருமாற்றம் நிகழ்ந்து பல வருடங்களின் பின், கஜ பாகு மகாராஜா என அழைக்கப்பட்ட மன்னன் ஒருவன் திரு கோணாமலைக்கு யாத்திரை வந்தான்.

வந்த இடத்தில் கோவில் அதுவரை நிர்வகித்து வந்த பாசபட்டர் (பாசுபதர்) இறந்து விட்டதையும் அவருக்கு பின் அதை ஒருவரும் கவனிக்காததையும் கண்டு துக்கித்தான் கோவில் குருக்களின்றி பூசையில்லாமலிருந்த நிலையை மாற்றியமைக்க முடிவு செய்தான்.

அரசன் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் பொழுது இரு பிராமணச் சிறுவர்கள் கையில் வேதத்துடன் சமுத்திரத்தில் மிதந்து வருவதைக் கண்டான். அவர்களைக் கண்டவுடன் மகிழ்ச்யடைந்து, தன்னிருக்கை விட்டெழுந்து அவர்களை நோக்கி கடலில் இறங்கிச் சென்று இருகைகளிலும் ஒவ்வொருவரைப் பிடித்து கரைக்கு அழைத்து வந்தான். அவர்களை இருபாதி என்று அழைத்தான்.

அவர்கள் இருவரையும் கோவில் குருக்களாக நியமித்து அவர்களுக்கு மரியாதை செய்து கீழ்ப்படிந்து நடக்கும்படி வன்னியருக்கும், தானாட்டார், வாரியப் பட்டருக்கும் உத்தரவிட்ட துடன், அவர்களது சேவையை முன்போல அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்.

கஜபாகு மகராஜா, ஐந்து வகையான நகர சேவையாளர்களை (பொற் கொல்லர், மட்பாண்டம் செய்வோர், நாவிதர், வண்ணக்கர், பறையர்) திருமலையில் குடியமர்த்தி அவர்களுக்கு. நிலமும் நெல்வயலும் வழங்கினார்.

அடுத்ததாக மகாவலிகங்கைக்கு அணித்தாக உள்ள கொட்டியாரத்தில் ஓர் குளம் கட்டுவிக்கவும் , 6350 அமோனம் நெற் காணிகளில் விளைச்சலைப் பெருக்கவும், புன்னை இலுப்பை ஆமணக்கு, கொக்கோ மரங்களைப் பயிரிடவும் கஜபாகு ஏற்பாடு செய்தான். இவற்றின் வருமானத்தில் பத்தில் ஒரு பாகத்தை கோவிலுக்கு அளிக்க வேண்டுமெனவும் கட்டளையிட்டான்,

சைவ வணக்க ஸ்தலத்தை இத்துத்தள்ளிவிட்டு அவ்விடத்தில் ஓர் பௌத்த ஆலயத்தை நிர்மாணிப்பதென தான் முன்பு திட்டமிட்ட பாவத்துக்கு கழுவாய் தேடிக்கொள்ளுமுகமாகவே கஜபாகு மன்னன் கோணேசர் சுவாமிக்கு மேற்கண்ட தொண்டுகளைப் புரிந்தான்.

அதன் பின்னர் கஜபாகு மகராஜா, நாட்டுப் பிரஜைகளை அழைத்து குளக்கோட்டு மகாராஜா ஸ்தாபித்த நிறுவவனங்களை அழித்துவிடாதபடி பாதுகாக்கும்படி கட்டளையிட்டதுடன் இரு பாதி பிராமணர்களுக்கு ராஜகுரு, என்ற பட்டமளித்ததுடன் கோவிலுக்கு சொந்தமான நகைகளையும், செல்வங்களையும் அவர்களிடமே ஒப்படைத்தான்.

பின்னர், தனது தலைநகராகிய அனுராதபுரம் திரும்பி நீண்டகாலம் ஆட்சிபுரிந்ததன் பின்னர் சிவனடி சேர்த்தான்''



GalleryGallery
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US