யாழ் வடமராட்சியில் கடற்படையினரின் திடீர் சுற்றிவளைப்பு! 18 பேர் அதிரடி கைது
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் 18பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்றையதினம் (15-05-2024) அதிகாலை கடற்பரப்பில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த 18 பேர் 7 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி முறைகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், கைது செய்யப்பட்ட மீனவர்கள் வெற்றிலைக்கேணி மற்றும் சுண்டிக்குளம் கடற்படை முகாமிற்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.