17 வயது இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்: பலாங்கொடையில் சம்பவம்
பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் பலாங்கொடை ரத்மளவின்ன பிரதேசத்தில் நேற்று (30) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவம் முச்சக்கர வண்டியும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில், பலாங்கொடை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த இளைஞரனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக, பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.