குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 17 இளைஞருக்கு நடந்த அசம்பாவிதம்
காலி - ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பே கடற்கரைப் பகுதியில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

தேடும் பணிகள்
நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளவர் குருணாகல் - மல்லவபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காணாமல் போன இளைஞர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
1½ வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள் ; உடைக்கப்பட்ட கைகள் ; காதலனுடன் பெற்ற தாய் செய்த பெரும் கொடூரம்
கடலில் நீராடிக்கொண்டிருந்த போது அவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.
காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகளும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் ஹபராதுவ பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
[